districts

விதிமுறைகளை பின்பற்றினால்தான் பட்டாசுக்கடைக்கு அனுமதி: தீயணைப்புத்துறை

சென்னை, அக்.7-  தீபாவளி பண்டிகை வருகிற 24-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி தற்காலிக பட்டாசு கடைகளை அமைப் பதற்கான முயற்சிகளில் வியாபாரிகள் ஈடு பட்டு வருகிறார்கள்.   இதையடுத்து பட்டாசு கடைகளில் விபத்து ஏற்படாமல் இருப்பதற்கு பல்வேறு வழிகாட்டுதல்களை தீயணைப்பு துறை அறிவித்துள்ளது. தீயணைப்பு துறையின் தடையில்லா சான்றிதழ் பெற்றால் தான் அந்தந்த மாநகர காவல்துறை அல்லது  வருவாய் துறையிடம் இருந்து பட்டாசு  கடை திறப்பதற்கு உரிமம் பெற முடியும். பட்டாசு கடைகளை ஒழுங்குபடுத்துவதற்கு தீயணைப்பு துறை இயக்குநர்கள் அலுவல கத்தில் இருந்து தமிழகம் முழுவதும் உள்ள  தீயணைப்பு நிலையங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.  அந்த சுற்றறிக்கையில் கூறி இருப்பதா வது:- வெடிபொருள், சட்டப்படி பட்டாசு கடை  வைக்கும் இடம் கான்கிரீட் கட்டிட மாக இருக்க வேண்டும். கடைக்குள் செல்லவும், வெளியேறவும் இரு புறங்களி லும் கட்டாயம் வழி இருக்க வேண்டும். கட்டிடத்தில் மின் விளக்குகளை மட்டும் பயன் படுத்த வேண்டும். அடுக்குமாடி குடியிருப்பு கள், திருமண மண்டபம், அரங்குகள் ஆகிய வற்றில் பட்டாசு கடைகளை அமைக்க அனுமதி இல்லை. பட்டாசு வைத்திருக்கும் அறை 9 சதுர மீட்டருக்கும் குறைவானதாக இருக்கக்கூடாது. ஒரு பட்டாசு கடைக்கும், மற்றொரு பட்டாசு கடைக்கும் குறைந்த பட்சம் 3 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். உதிரி பட்டாசுகளை கடைகளில் விற்பனை செய்யக்கூடாது என்பன உள்ளிட்ட 30 விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். வழிமுறைகளை பின்பற்றினால் மட்டுமே பட்டாசு கடை அமைப்பதற்கு அனு மதி மற்றும் தீயணைப்பு துறையில் தடை யில்லா சான்றிதழ் வழங்கப்படும். இவ்வாறு  அதில் கூறப்பட்டுள்ளது.

;