districts

img

தைராய்டு புற்றுநோய்க்கு ரோபோ உதவியுடன் தழும்பில்லாத தைராய்டு அகற்றல் சிகிச்சை!

சென்னை, செப். 10- தமிழ்நாட்டில் முதன் முறையாக ரோபோ உதவி யுடன் தழும்பில்லாத தைராய்டு உறுப்பு அகற்றல் செயல்முறையை அப் போலோ புற்றுநோய் மருத்துவ மையம் சென்னை யில் வெற்றிகரமாக செய்து ள்ளது. 45 வயதான கலா வதி (பெயர் மாற்றப்பட் டுள்ளது) என்பவருக்கு இந்த சிகிச்சை செய்யப்பட்டது.  தைராய்டக்டோமி என  அழைக்கப்படும் சிகிச்சை யானது, தொண்டையில் முன்புறத்தில் அமைந்துள்ள தைராய்டு சுரப்பி முழுவதை யும் அல்லது அதில் ஒரு பகு தியை அறுவைசிகிச்சையின் மூலம் அகற்றுவதாகும்.  ரோபோடிக் சாதனங் களின் உதவியுடன் கழுத்தில் தழும்பில்லாமல் மேற்கொள் ளக்கூடிய சிகிச்சையாகும் இது. இதனால் வேகமாக குணமடைவதோடு 24 மணி நேரத்தில் நோயாளி மற்ற வேலைகளை பார்க்கலாம். மேலும் நோயாளிகளின் வாழ்க்கைத்தரத்தையும் இத்தகைய சிகிச்சை மேம் படுத்துவதாக அப்போலோ  புற்றுநோய் மையத்தின் முதுநிலை அறுவைசிகிச்சை நிபுணர் டாக்டர். பி.வெங்கட் கூறினார்.  நாட்டில் தைராய்டு புற்று நோய் விகிதங்கள் கவலை ப்படும் அளவிற்கு அதி கரித்து வருகின்றன. அதுவும் குறிப்பாக 30 ஆண்டுகள் வயதிற்கு குறைவான இள வயது நபர்களிடமும், பெண்களிடமும் இதுஅதிக மாக காணப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகள் காலஅளவில் தைராய்டு புற்றுநோயின் நேர்வு பெண்களில் 62%-ம்  ஆண்களில் 48%-ம் அதிகரித் திருக்கின்றன. தைராய்டு புற்றுநோய்கள், சிகிச்சை யின் மூலம் குணப்படுத்தக் கூடியவை என்றார் அவர்.

ரோபோடிக் தைராய்டக்டோமி என்பது  மிக குறைவான ஊடுருவல் அதாவது கழுத்தில் எவ்வித தழும்புகளையும் உருவாக்காமல் தைராய்டு சுரப்பி நீக்கப்படும். 
இச்செயல்முறைக்காக அக்குள் பகுதியில் 4 மி.மீட்டருக்கும் அதிகமில்லாத ஒரு சிறிய வெட்டு செய்யப்படும்.
வழக்கமாக இதுபோன்ற அறுவைசிகிச்சைக்கு பின்னர் நோயாளின் குரலில் மாறுதல் இருக்கும். தற்போது ரோபோடிக் சாதனத்தின் உதவியுடன் 10 மடங்கு பெரிதாக்கி நரம்புகள் பாதிக்காதவாறு சிகிச்சை அளிக்கப்படுவதால் குரல் அப்படியே தக்கவைக்கப்படுகிறது.
அயோடின் பற்றாக்குறை நீடித்தால் அது பின்நாட்களில் தைராய்டு புற்றுநோய்க்கு வழிவகுக்கலாம்.
வழக்கமாக புற்றுநோய்க்கு மரபணு காரணமாக இருக்கும். ஆனால் தைராய்டு புற்றுநோய்க்கு மரபணு காரணங்கள் மிகமிகக்குறைவு.