districts

img

விழுப்புரம் தொகுதியில் விசிக வேட்பாளர் ரவிக்குமார் அறிமுகம்

விழுப்புரம், மார்ச் 21- விழுப்புரம் மாவட்ட சிபிஎம் அலுவலகத்தில் வியாழக்கிழமை விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணி  விடுதலை சிறுத்தை கட்சியின் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் என்.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார், கூட்டத்தில் இந்தியா கூட்டணியில் விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் விசிக வேட்பாளர் து.ரவிக்குமாரை சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன்,  முன்னாள் எம்எல்ஏ ஆர்.ராமமூர்த்தி ஆகியோர் சால்வை அணிவித்து வரவேற்று அறிமுகப்படுத்தினர். அப்போது கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி.ராதாகிருஷ்ணன், வேண்டும் பி.குமார், எஸ்.முத்துக்குமரன், ஜி.ராஜேந்திரன்,ஏ.சங்கரன், எஸ்.கீதா, ஆர்.மூர்த்தி, எஸ்.வேல்மாறன், சே.அறிவழகன், ஆர்.டி முருகன், வட்ட செயலாளர்கள் ஆர்.கண்ணப்பன், டி.முருகன், டி..ராமதாஸ், கே.சிவக்குமார், ஏ.சகாதேவன், எஸ்.கணபதி, எம்.கே.முருகன், ஒன்றிய செயலாளர் பி.சிவராமன் உட்பட மாவட்ட குழு உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு வாழ்த்துகளை தெரிவித்தனர்.