districts

img

சென்னையில் 10 நிமிட அவசர சிகிச்சை வாகனசேவை அறிமுகம்

சென்னை, ஆக.22-

     சென்னையில் 10 நிமிட அவசரகால வாகன சேவையை  ரெட் ஹெல்த்  நிறுவனம் வடபழனி விஜயா குழும மருத்து வமனைகளுடன் இணைந்து அறிமுகப்படுத்தியுள்ளது.  

     இதனால் அவசர நேரத்தில் மருத்துவமனைக்கு வரவிரும்பும் நோயாளிகளுக்கு மருத்துவமனை வாகனம் கிடைக்காதபோது ரெட் ஹெல்த் வாகனம் அந்த சேவையை  வழங்கும். இதனால் குறித்த நேரத்திற்குள் நோயாளி மருத்துவமனைக்கு அழைத்து வரப்படுவதால் அவர் உயிர் காப்பாற்றப்படும் என்று விஜயா ஹெல்த் குழும நிர்வாக  அறங்காவலர்  பாரதி ரெட்டி கூறினார்.

     இதற்கான துவக்க நிகழ்ச்சியில் ரெட் ஹெல்த்  தலைமை வர்த்தக அதிகாரி ஷலப் டாங், மருத்துவமனையின் தலைமை  மருத்துவ நிர்வாக அதிகாரி அணில் குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.