நீரஜ் சோப்ராவின் தாயார் சரோஜ் தேவி பத்திரிகையாளர்கள் சந்திப்பின் பொழுது,”நீரஜ் வெள்ளிப் பதக்கம் வென்றது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தங்கப்பதக்கம் வென்ற அந்த வீரரும் (அஷ்ரத் நதீம்) எனது மகன்தான். அங்கு செல்லும் அனைவரும் கடினமாக உழைக்கிறார் கள். நீரஜ் சோப்ரா வீட்டுக்கு வந்தவுடன் அவருக்கு விருப்பமான உணவை நான் சமைத்து கொடுப்பேன்” எனக்கூறினார். நீரஜ் சோப்ராவின் தாயார் சரோஜ் தேவியின் இந்த கருத்து சமூகவலைத் தளங்களில் டாப் டிரெண்ட்டிங்கில் வைர லாகி வரும் நிலையில், இந்திய ரசிகர் கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பாகிஸ்தான் வீரர் அஷ்ரத் நதீம் எங்க ளது சகோதரர் எனக் கூறி வாழ்த்து களுடன் மீம்ஸ் வெளியிட்டு கொண்டாடி வருகின்றனர்.