தருமபுரி, ஜூன் 4-
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து வினாடிக்கு 4000 கன அடியாக அதிகரித்துள்ளது.
சனிக்கிழமை மாலை வினாடிக்கு 2000 கன அடியாக இருந்த தண்ணீர் வரத்து, ஞாயிறன்று (ஜூன் 4) 4000 கனஅடியாக அதிகரித்தது. இந்நிலையில் மேட்டூர் அணை யின் நீர்மட்டம் 103.730 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 2,267 கனஅடி நீர் வந்துகொண்டிருக்கிறது குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1500 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அணையில் போதுமான அளவு தண்ணீர் இருப்பதால் திட்டமிட்டபடி வரும் 12 ஆம்தேதி டெல்டா பாசனத் திற்காக தண்ணீர் திறந்துவிடப்படவுள்ளது.