புதுச்சேரி, ஜூன் 1- நெடுஞ்சாலைக்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு சந்தை விலை மதிப்பில் இருந்து 10 மடங்கு இழப்பீட்டு தொகை உயர்த்தி வழங்கக் கோரி அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் புதுச்சேரி பாகூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய பாஜக அரசு உறுதியளித்தபடி விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும், புதுச்சேரி வழியாக செல்லும் விழுப்புரம், நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலைக்கு நிலம் வழங்கிய புதுச்சேரி விவசாயிகளுக்கு சந்தை விலை மதிப்பில் இருந்து 10 மடங்கு உயர்த்தி வழங்க வேண்டும். விவசாய விளை பொருட்களுக்கு எம்.எஸ்.சாமிநாதன் பரிந்துரைப்படி விலை நிர்ணயம் செய்ய வேண்டும். சட்டப்பேரவையில் விவசாயி களுக்கு அறிவிக்கப்பட்ட திட்டங்களை புதுச்சேரி அரசு உடனே அமல்படுத்த வேண்டும். பால் உற்பத்தியாளர்களுக்கு லிட்டருக்கு ரூ.50 உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது. வட்டச் செயலாளர் முருகையன் தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் பத்மநாபன், செயலாளர் சங்கர், நிர்வாகிகள் சதாசிவம், ராமசாமி, சிவப்பிர காசம் அரிதாஸ், பக்கிரி, சாம்பசிவம், வளர்மதி, வெங்கடாசலம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.