districts

img

ஊக்கத்தொகை, பேட்டா பிரச்சனை: போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை, செப். 16 - ஊக்கத் தொகை, பேட்டா பிரச்ச னையை தமிழக அரசு தலையிட்டு தீர்க்க வேண்டுமென்று தமிழ்நாடு  அரசு போக்குவரத்து ஊழியர் சம்மே ளன பொதுச் செயலாளர் கே.ஆறு முகநயினார் வலியுறுத்தினார். தொழில்நுட்ப ஊழியர்களுக்கு மாநகர போக்குவரத்து கழகத்தில் 38 ரூபாய் ஊக்கத்தொகை வழங் கப்பட்டு வந்தது. 2019ம் ஆண்டு அதி முக அரசு ஊக்கத்தொகையை மோச டியாக குறைத்தது. இதன் காரண மாக 16 ரூபாய் மட்டுமே பெறுகின்ற னர். இதர போக்குவரத்து கழகங்க ளில் 6 ரூபாய் மட்டுமே வழங்கப்படு கிறது. எனவே பழைய முறைப்படி ஊக்கத்தொகையை வழங்க வேண் டும், கட்டண உயர்வின்போது 80:20 விகிதத்தில் பேட்டா என்ற முறையை முறைப்படுத்த வேண்டும், பெண் கள் பயணத்திற்கான பேட்டாவை வழங்க வேண்டும் என்பன உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழனன்று (செப்.16) தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர் கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் ஒருபகுதியாக அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் (சிஐடியு)  சார்பில் பல்லவன் இல்லம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் ஆறுமுகநயினார் பேசுகையில், புதி தாக அமைந்துள்ள அரசு, ஊழியர்க ளின் ஊதிய ஒப்பந்தம், ஓய்வூதியர் மற்றும் கழகங்களுக்கு நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் என்ற நம்பிக்கையில் தொழிலாளர்கள் உள்ளனர்.

;