districts

img

புதிய நியாய விலை கடைகள் திறப்பு விழா

சென்னை ஆர்.கே. நகர் சட்டமன்ற உறுப்பினர் எபினேசர் தொகுதி மேம்பாட்டு  நிதியிலிருந்து  41ஆவது வட்டத்திற்குட்பட்ட சிவாஜி நகரில் கட்டப்பட்ட 4  புதிய நியாய விலை கடைகள்,  சிறுவர் விளையாட்டு திடல் ஆகியவற்றின் திறப்பு விழா திங்களன்று (டிச. 12) நடைபெற்றது. இதில் சட்டமன்ற உறுப்பினர் ஜே.ஜே.எபினேசர்,  நிலைக் குழு தலைவர் தா.இளைய அருணா, 4ஆவது மண்டலக் குழு தலைவர் நேதாஜி யூ.கணேசன், 41ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் பா.விமலா, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.லோகநாதன் பகுதிச் செயலாளர் வெ.ரவிகுமார், நிர்வாகிகள் கி.தேவன், ஜோதிபாசு, திருமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.