இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் விழுப்புரத்தில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி மாவட்டச் செயலாளர் அமீர் அப்பாஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் அமைச்சர் க.பொன்முடி, மக்களவை உறுப்பினர் துரை.ரவிக்குமார், எம்எல்ஏக்கள் புகழேந்தி, லட்சுமணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.ராமமூர்த்தி, சிபிஐ மாநிலக்குழு உறுப்பினர் ஏ.வி.சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.