சென்னை மாநகராட்சி பகுதியில், குப்பை அள்ளும் பணியை தனியாருக்கு தாரைவார்க்க கூடாது, என்யுஎல்எம் திட்டத்தை ரத்து செய்து மாநகராட்சியே நேரடியாக 26 ஆயிரம் ரூபாய் ஊதியம் வழங்க வேண்டும், என்எம்ஆர், எல்யுஎல்எம் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளியன்று (மார்ச் 24) சென்னை மாநகராட்சி செங்கொடி சங்கத்தினர் 20க்கும் மேற்பட்ட இடங்களில் மனித சங்கிலி நடத்தினர்.