districts

img

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற கோரி அரசு ஊழியர்கள் தர்ணா

சென்னை, ஜூலை 26- பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்தப்படும் என்ற அரசின் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி செவ்வாயன்று (ஜூலை 26) சென்னையில் இரண்டு  மையங்களில் அரசு ஊழியர் கள் தர்ணா போராட்டம் நடத்தினர். ஊதியம் வழங்குவதில் (ஐஎப்எச்ஆர்எம்எஸ் திட்டம்) உள்ள குளறு படிகள், குறைபாடுகளை நீக்கி அரசே அதை ஏற்று  நடத்த வேண்டும். அக விலைப்படி, சரண்விடுப்பு, வருங்கால வைப்பு நிதி வட்டி குறைப்பு உள்ளிட்ட கொரோனா காலத்தில் பறிக்கப்பட்ட சலுகைகளை உடனே வழங்கவேண்டும். சத்துணவு, அங்கன் வாடி, வருவாய் கிராம உதவி யாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள், எம்.ஆர்.பி. செவிலியர்கள் உள்ளிட்ட லட்சக்கணக்கான தொகுப் பூதியம் பெறும் ஊழியர்க ளுக்கு காலமுறை ஊதியம் வழங்கவேண்டும். 4.50 லட்சம் காலி பணி யிடங்களை நிரப்ப வேண் டும்,  ஒப்பந்தம், தினக்கூலி,  அவுட்சோர்சிங் முறைகளை கைவிட வேண்டும்.

சாலைப் பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை வரன்முறைப்படுத்த வேண்டும். 21 மாத  ஊதிய மாற்ற நிலுவைத்  தொகையை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியுறுத்தி  தமிழகம் முழுவ தும் மாவட்டத் தலைநக ரங்களில்  தமிழ்நாடு அரசு  ஊழியர் சங்கத்தின் சார்பில்  இந்த போராட்டம் நடை பெற்றது. அதன் ஒருபகுதியாக வடசென்னை மாவட்டத் தலைவர்  பி.சுந்தரம்மாள் தலைமையில் குறளகத்தில்  நடைபெற்ற போராட்டத் தில் மாநிலத் தலைவர்  மு.அன்பரசு, துணைப்  பொதுச் செயலாளர் தெ.வா சுகி, மாவட்டச் செயலாளர் ம.அந்தோணிசாமி, பொரு ளாளர் டி.ஏழுமலை, இணைச் செயலாளர் ஜி.ம கேந்திரன் உள்ளிட்டோர் பேசினர். தென்சென்னை மாவட்டத் தலைவர் சி.கலை செல்வி தலைமையில் நடை பெற்ற போராட்டத்தில் மாநிலச் செயலாளர்கள் உ.சுமதி, அண்ணா குபேரன், மாவட்ட பொருளாளர் பெ.ஜெயராமன், இணைச் செயலாளர் எம்.செந்தில் குமார், தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலுவலர் சங்க பொதுச்செயலாளர் என்.ரமேஷ் உள்ளிட்டு துறை வாரி சங்கங்களின் தலை வர்கள் பேசினர்.

;