districts

img

கார்ப்பரேட்டுகளின் கையில் சிக்கித்தவிக்கும் இந்தியாவை பாதுகாப்போம்: அரசு ஊழியர்கள் தர்ணா

சென்னை, மே 28 - அகில இந்திய கோரிக்கை நாளையொட்டி நாடு முழுவதும் ‘கார்ப்பரேட்டுகளின் கையில்  சிக்கித்தவிக்கும் இந்தியாவை பாதுகாப்போம்” என்ற முழக்கத்தோடு மாநில  அரசு ஊழியர்கள் சங்கங்கள் சார்பில் கோரிக்கை விளக்கக் கூட்டங்கள் சனிக்கிழமை (மே 28) நடைபெற்றன. அதன் ஒருபகுதியாக தமிழ்நாடு அரசு  ஊழியர் சங்கத்தின் சென்னை மாவட்டத்  தலைவர்கள் ப.சுந்தரம்மாள், சி.கலைச் செல்வி தலைமையில் சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் தர்ணா நடைபெற்றது. சிஐடியு மாநிலச் செயலாளர் பி.பால கிருஷ்ணன் போராட்டத்தை துவக்கி வைத்து பேசினார். வடசென்னை மாவட்டச்  செயலாளர் ம.அந்தோணிசாமி, தென் சென்னை மாவட்டச் செயலாளர் நா.வினோத் குமார் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். ஜாக்டோஜியோ மாநில ஒருங்கி ணைப்பாளர் கு.வெங்கடேசன், ஏ.ஜி. அலுவலக ஊழியர் சங்கத்தின் மாநில செயலாளர் கி.ரமேஷ், மின் ஊழியர் மத்திய  அமைப்பின் மாநிலத் தலைவர் தி.ஜெய்சங்கர், தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சே.பிரபாகரன், தமிழ்நாடு உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் அ.சீனிவாசன், வி.பிரமிளா ( மாதர் சங்கம்) ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.  மாநிலத் தலைவர் மு.அன்பரசு போராட் டத்தை நிறைவு செய்து பேசினார். முன்னதாக  பகுதிச் செயலாளர் சா.வே.அருள் டானியல் வரவேற்றார். மாவட்டப் பொருளாளர் த.ஏழு மலை நன்றி கூறினார்.