சென்னை, ஜூன் 1 - பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத் தில் உருவான ‘ஸ்மார்ட் விஷன் கிளாஸ் புரோ’ கண்ணாடி வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை யன்று (ஜூன் 1) சைதாப் பேட்டையில் நடைபெற்றது. தேசிய பார்வையற்றோர் இணையத்தின் தலைவர் மனோகரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், கண்ணாடிகளை உற்பத்தி செய்யும் எஸ்எச்ஜி டெக்னா லஜிஸ் நிறுவன ஊழியர் கள் பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு விளக்கி னர். புளூடூத் போன்ற இந்த கண்ணாடிகளை செல் போனுடன் இணைத்து விட்டு பார்வை மாற்றுத் திறனாளிகள் அணிந்து கொள்ளலாம். சாலையில் நடந்து செல்லும் போது சுற்றி யுள்ளவற்றை படம் பிடித்து அதை ஒலிபெருக்கி வாயி லாக அறிவிக்கும். பேருந்து நிறுத்தத்தில் நிற்கும் போது, அங்கு வரும் பேருந்தின் எண், செல்லும் இடம் போன்றவற்றை கண்ணாடி யில் உள்ள ஒலிபெருக்கி அறிவிக்கும். கண்ணாடியை அணிந்து கொண்டு புத்தகங்களை பிரித்து பார்த்தால், அந்த பக்கத்தை படம் எடுத்து வாசிக்கும். இந்த கண்ணாடி வாயிலாக பாடல்களை கேட்க முடியும், பிறரோடு பேச முடியும். இதுபோன்ற பல வசதிகளை கொண்ட இந்த கண்ணாடியின் விலை 36 ஆயிரம் ரூபாய். இந்த கண்ணாடியை பல் வேறு அமைப்புகளின் உதவியோடு பார்வையற் றோர் இணையம் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கி வருகிறது.