districts

img

பொதுமுடக்கம் அமலுக்கு வந்தது: வடமாவட்டங்களில் வெறிச்சோடிய சாலைகள்

சென்னை, மே 10- முழு பொது முடக்கத்தை யொட்டி சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் பொதுமக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டு இருந்தது. அத்தி யாவசிய வாகனங்கள் மட்டுமே  ஓடியதால் சாலைகள் வெறிச் சோடிக் காணப்பட்டன. தமிழகத்தில் கொரோனா பர வல் கடந்த ஆண்டை விட இந் தாண்டு வேகமாக அதிகரித்து வரு கிறது. இதையடுத்து புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்  வர் மு.க.ஸ்டாலின் அதனை கட்டுப்  படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். அந்த வகையில் கொரோனா  பரவலை கட்டுப்படுத்த 2 வாரங்க ளுக்கு முழு பொதுமுடக்கம் கடை பிடிக்கப்படும் என்று அரசு சார்பில்  சனிக்கிழமை அறிவிப்பு வெளி யிடப்பட்டது. அதைத்தொடர்ந்து சனிக்கிழமை, ஞாயிறுக்கிழமை அனைத்து கடைகளையும் திறந்து வைக்க அனுமதி அளிக்கப்பட்டது. அறிவித்தபடி திங்கட்கிழமை முதல் முழு பொதுமுடக்கம் அம லுக்கு வந்தது. பொதுமுடக்கம் கார ணமாக பேருந்து, கார், ஆட்டோக்  கள் ஓடவில்லை. முன்களப் பணி யாளர்களுக்காக சில மாந்கரப் பேருந்துகள் இயக்கப்பட்டன. அரசு துறைகளில் மின்சாரம், குடி நீர், உள்ளாட்சி துறை உள்ளிட்ட முக்கிய அலுவலகங்கள் தவிர அனைத்து அலுவலகங்களும் செயல்படுவதற்கு தடை விதிக்கப் பட்டு இருந்ததால் பெரும்பாலான அரசு அலுவலகங்களும் இயங்க வில்லை.

பெரிய கடைகள், வணிக வளா கங்கள், டாஸ்மாக் கடைகள், அழகு  நிலையங்கள், சலூன்கள், உடற்  பயிற்சி கூடங்கள், யோகா பயிற்சி  நிலையங்கள், கேளிக்கை பூங்காக்கள், தகவல் தொழில்நுட்ப  நிறுவனங்கள் உள்ளிட்டவை முழு மையாக மூடப்பட்டன. மாவட்டங்க ளுக்கு இடையேயான பொது போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டன. பால் வண்டிகள், பத்திரிகை வாகனங்கள், மருத்துவமனை வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள் ஆகியவை தடையின்றி ஓடின.  முழு பொதுமுடக்கம் காரணமாக  சென்னை உட்பட அனைத்து மாவட்  டங்களிலும் பொதுமக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் ஐ.டி. நிறு வனங்களில் பணிபுரிவோர் வீடு களில் இருந்து பணியாற்ற அறி வுறுத்தப்பட்டிருந்தது. இதனால் சென்னையில் அனைத்து நிறுவ னங்களும் மூடப்பட்டு இருந்தன. முழு பொதுமுடக்கத்தின் போது தடையை மீறி தேவை யின்றி வெளியில் சுற்றுபவர்களை  பிடிக்க காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். சென்  னையில் 200 இடங்களில் வாகன சோதனை நடத்தப்பட்டது. கோயம்  பேடு காய்கறி மார்க்கெட் காசிமேடு  மீன் மார்க்கெட் உள்ளிட்ட பகுதி களில் கூடுதல் காவலர்கள் நிறுத்  தப்பட்டு இருந்தனர். முகக் கவசம்  அணியாதவர்கள், தனிமனித  இடைவெளியை பின்பற்றாதவர் கள் உள்ளிட்டோர் மீதும், தேவை யின்றி வெளியில் வந்தவர்கள் மீதும்  வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சென்னையில் 30 பெரிய மேம்  பாலங்கள் மூடப்பட்டு இருந்தன.  இதே போன்று மற்ற மாவட்டங்க ளிலும் மேம்பாலங்களை மூடி  காவல் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

;