districts

img

மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீடு தென்சென்னை மாவட்ட மாநாடு கோரிக்கை

சென்னை, ஜூன் 11 - வீடில்லாத மாற்றுத் திறனாளிகளுக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியி ருப்பில் இலவச வீட்டு ஒதுக்க  வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரி மைகளுக்கான சங்கத்தின் தென்சென்னை மாவட்ட  4வது மாநாடு சனிக்கிழ மையன்று (ஜூன் 10)  நங்கநல்லூரில் நடை பெற்றது. இந்த மாநாட்டில், மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகை 3 ஆயிரம்  ரூபாயாகவும், கடும் ஊன முற்றோருக்கு 5 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்த வேண்டும், அரசு மற்றும்  தனியார் துறை வேலைக ளில் 4 விழுக்காடு இட  ஒதுக்கீடு வழங்க வேண்டும்,  மாநகராட்சி, நகராட்சிக ளில் உள்ள மாற்றுத்திறனாளி களுக்கு 100 நாள் வேலை திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் ஏ. கிருஷ்ணன் தலைமை தாங்கினார். துணைச்செயலாளர் ஆர். லாரன்ஸ் சங்க கொடியை ஏற்றினார். அஞ்சலி தீர்மா னத்தை துணைச் செயலா ளர் எம். சரஸ்வதி எம்.சி., வாசித்தார். வரவேற்புக் குழு தலைவர் க. பீம்ராவ் வரவேற்றார். மாநில துணைச்செயலா ளர் பி.எஸ். பாரதி அண்ணா  மாநாட்டை தொடங்கி வைத்துப் பேசினார். மாவட்டச் செயலாளர் என். சாந்தி வேலை அறிக்கை யும், பொருளாளர் கே.பி.  பாபு வரவு, செலவு அறிக்கை யும் சமர்ப்பித்தனர். சங்கத்தின் மாநிலச் செயலாளர் பி. ஜீவா, மத்திய சென்னை மாவட்டச்  செயலாளர் எஸ். மனோன் மணி, மாவட்டச் செயலா ளர்கள் பா. பாலகிருஷ்ணன் (சிஐடியு), ம. சித்ரகலா (மாதர் சங்கம்), தீ. சந்துரு  (வாலிபர் சங்கம்) உள்ளிட்டோர் பேசினர். மாநிலத் தலைவர் பா. ஜான் சிராணி நிறைவுரையாற்றி னார். சங்கத்தின் தலைவ ராக ஏ.கிருஷ்ணன், செயலா ளராக எம்.குமார், பொருளா ளராக ஆர்.லாரன்ஸ் ஆகி யோர் தேர்வு செய்யப்பட்ட னர்.

;