districts

img

செம்மண்டலத்தில் இலவச சிலம்ப பயிற்சி பள்ளி தொடக்கம்

 கடலூர்,மே 1- தமிழ்நாடு பாரம்பரிய சிலம்பம் அசோசியேஷன் சார்பில்  ஆர்.எம்.வி சிலம்பம் இலவச பயிற்சி பள்ளி வெளிச்செம்மண்டத்தில் தொடங்கப்பட்டது. கடலூர் அனைத்து குடியிருப்போர் நல சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற சிலம்பம் விளையாட்டு இலவச பயிற்சி முகாம் துவக்க விழாவில் கடலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கோ.ஐயப்பன் துவக்கி வைத்து மாணவர்களுக்கு சிலம்பம் குச்சி வழங்கினார். தமிழ்நாடு பாரம்பரிய சிலம்பம் அசோசியேசன் மாநிலத் தலைவர் எஸ்.கே.தேவநாதன் தலைமை வகித்தார். கராத்தே மாஸ்டர் கே.சாய் கிருஷ்ணன், எம்.கார்த்திக் வரவேற்றார். கூட்டமைப்புத் தலைவர் பி.வெங்கடேசன்,  இணைப்பு பொதுச் செயலாளர் டி.புருஷோத்தமன் உள்ளிட்ட நிர்வாகிகள் வாழ்த்துரை வழங்கினர்.