சென்னை, ஜூலை 28 - உற்பத்தியை நிறுத்திவிட்டு, தனியாரிடம் அதிக விலைக்கு கொள்முதல் செய்வதே, மின்வாரிய நட்டத்திற்கு காரணம் என்று மின்ஊழியர் மத்திய அமைப்பின் மத்திய அமைப்பின் பொதுச் செயலாளர் எஸ்.ராஜேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். மின்ஊழியர் மத்திய அமைப்பின் 17வது மாநாட்டு ஆக. 12-14 தேதிகளில் நடைபெறு கிறது. இதனையொட்டி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக புதனன்று (ஜூலை 27) புதுப்பேட்டையில் மத்திய சென்னை திட்டம் சார்பில் பிரச்சாரம் நடை பெற்றது. ‘புதுகை பூபாளம்’ குழுவினர் அரசி யல் விழிப்புணர்வு கலை பிரச்சாரம் நடை பெற்றது. இந்நிகழ்வில் எஸ்.ராஜேந்திரன் பேசியதன் சுருக்கம் வருமாறு: பொதுத்துறைகளை பாதுகாக்க சிஐ டியு போராடுகிறது. 6 லட்சம் கோடி ரூபாய் வருவாய் ஈட்ட ஒன்றிய அரசு பொதுத் துறைகளை தனியாருக்கு 99 வருட குத்தகை அடிப்படையில் விற்று வரு கிறது. கட்டணங்களை உயர்த்தினால் தொழி லாளர்களுக்கு லாபம். ஆனால், கட்ட ணத்தை உயர்த்த தேவையில்லை. அரசு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். ஒன்றிய அரசு தர வேண்டிய மின்சாரத்தை வலி யுறுத்தி பெற வேண்டும். அதிக விலை கொடுத்து தனியாரிடம் இருந்து 41 ஆயிரம் கோடி ரூபாய்க்கு கொள்முதல் செய்வதை கைவிட வேண்டும்.
கான்ட்ராக்ட், கேசுவல் போன்ற முறை களால் நிரந்தர பணியிடங்களை ஒன்றிய அரசு அழித்து வருகிறது. அதை பின்பற்றி தமிழக அரசும் செயல்படுகிறது. வட சென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகா வாட் உற்பத்தி அலகை முழுவதுமாக அவுட் சோர்சிங் விடுகின்றனர். விடியல் அரசு மக்க ளுடைய வாழ்வில் விடியலை ஏற்படுத்தா மல் உள்ளது. மின்கட்டண உயர்வின் மூலம் மீண்டும் இருளில் தள்ளுகிறது. வாரி யத்தில் உள்ள 56 ஆயிரம் காலி பணி யிடங்களை நிரப்ப மறுக்கிறது. அரசுத் துறைகள், மாநில பொதுத் துறைகளில் மட்டும் சுமார் 4 லட்சம் காலிப்பணியிடங்கள் உள்ளன. அவற்றை நிரப்ப வேண்டும். மின்சார திருத்த சட்ட மசோதா நாடாளு மன்றத்தில் நிறைவேறினால், மின்சார வாரி யம் தனியாரிடம் சென்றுவிடும். அதிக விலைக்கு மின்சாரத்தை வாங்குவதோடு, உற்பத்தி, விநியோகத்தை தனியாரிடம் கொடுக்க உள்ளனர். சென்னை மாந கரை, டாடா அல்லது அதானி வாங்கி விட்டால், அதிகமாக மின் சாரத்தை பயன்படுத்துவோருக்கு மட்டுமே மின்சாரத்தை தருவார்கள். குறை வாக பயன்படுவத்துவோருக்கு மறுப்பார் கள். எனவே, மின்வாரியத்தை பொதுத் துறையாக பாதுகாக்க வேண்டும்.
62 தொழிலாளர்கள் பலி
திமுக அரசு பதவியேற்ற பிறகு ஒரு லட்சம் இணைப்பு வழங்க இலக்கு நிர்ண யித்தது. குறிப்பிட்ட காலத்தில் அனைத்து இணைப்புகளையும் வழங்கி உள்ளோம். கடந்த 7 மாதத்தில் 62 மின்சார தொழி லாளர்கள் உயிரை பலி கொடுத்து இதனை செய்துள்ளோம். இலவச மின்சாரத்தால்தான் தொழில்புரட்சி, பசுமை புரட்சிகள் ஏற்பட்டது. இதை புரிந்து கொள்ளாமல் ஒன்றிய அரசு செயல் படுகிறது. தரமான மின்சாரம், தடையில்லா மின்சாரம், வாங்கும் விலையில் மின்சாரம் கிடைக்க மின்வாரியத்தை பொதுத் துறையை பாதுகாப்போம். இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்வில் மத்திய அமைப்பின் மாநிலத் தலைவர் தி.ஜெய்சங்கர், பொரு ளாளர் வெங்கடேசன், மாநிலச் செயலாளர் தயாளன், மண்டலச் செயலாளர்கள் ரவிக் குமார், முருகானந்தம், திட்ட தலைவர் சீனி வாசன், செயலாளர் கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.