சென்னை, ஜூலை 6-
ஆவின் நிறுவனம் பால் மட்டுமின்றி, 230-க்கும் மேற்பட்ட பால் பொருட்கள் தயாரித்து, விற்பனை செய்கிறது.
பால் உற்பத்தியாளர்கள், தனியார் மற்றும் அமுலுக்கு பால் வழங்குவதில் ஆர்வம் காட்டுவதால், ஆவின் கொள்முதல் சுமார் 35 லட்சம் லிட்டரில் இருந்து 25 லட்சம் லிட்டராக குறைந்துள்ளது. இதன் எதிரொலியாக, பால் பவுடர், உப்பு கலந்த வெண்ணை, நெய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. சமையல் வெண்ணை, பாலாடை கட்டி உற்பத்தி பல மாதங்களுக்கு முன்பாகவே முடங்கியுள்ளது. சென்னை, அம்பத்தூர் கிடங்கில் கையிருப்பில் உள்ள நெய், வெண்ணை மட்டுமே, ஆவின் நேரடி விற்பனை நிலையங்களுக்கு திங்களன்று அனுப்பப்பட்டுள்ளன. இதனால், பல இடங்களில் நெய், வெண்ணை கிடைக்கவில்லை என புகார் எழுந்துள்ளது.