districts

காய்கறி விலை ஏற்றத்தை தொடர்ந்து எண்ணெய், பருப்பு விலை உயர்வு

சென்னை, மே 16- காய்கறி விலை ஏற்றத்தை தொடர்ந்து எண்ணெய் மற்றும் பருப்பு  வகைகளின் விலை வேகமாக உயர தொடங்கியுள்ளது. பெட்ரோல், டீசல் விலை  உயர்வு, சுங்க வரி உயர்வு,  ஆட்கள் கூலி அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு கார ணங்களால் மளிகை பொருட் களின் விலை உயர்ந்து இருக்கிறது. அந்த வகையில் ரூ.80-க்கு விற் பனை செய்யப்பட்ட ஒரு கிலோ துவரம் பருப்பு  தற்போது ரூ.96-க்கு  விற்பனை செய்யப்படுகிறது. ரூ.85-க்கு விற்பனையான உளுத்தம் பருப்பு ரூ.105- க்கும், ரூ.80-க்கு விற்பனை  செய்யப்பட்ட பாசிப்பருப்பு  ரூ.96-க் கும் விற்பனையா கிறது. சீரகம், கடுகு போன்ற வற்றின் விலை கிலோவுக்கு ரூ.15 உயர்ந்திருக்கிறது. தானிய வகைகளின் விலை யும் கணிசமாக அதிகரித் துள்ளது. இது ஒரு பக்கம் என்றால் எண்ணெய் வகை களின் விலையும் உயர்ந் திருக்கிறது. அதேவேளை யில் பாமாயில் மட்டும் விலை  குறைந்துள்ளது. கடந்த வாரம் ரூ.180-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு லிட்டர் பாமாயில் தற்போது ரூ.160-க்கு விற்பனையாகிறது. மற்றபடி எண்ணெய் வகை களின் விலை உயர்ந்து வருகிறது.

;