செங்கல்பட்டு, அக்.29- திருப்போரூர் கிரா மத்தில் விவசாயிகள் மற்றும் குடியிருப்போர்களுக்கு சொந்தமான நிலங்களின் பட்டா, சுவாமி கந்தசாமி கோயில் பெயரில் தவறாக பதிவு செய்யப்பட்டுள்ள பட்டா எண்.1-யை ரத்து செய்து 0 பட்டாவாக மாற்றம் செய்திட வேண்டும் என தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் சார்பில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்த மனுவில் தெரி வித்திருப்பதாவது. திருப்போரூர் கிராமத்தில் சுமார் 135 ஆண்டுகளுக்கு மேலாக சட்டத்தின் அடிப்படையில் விவசாயிகள் தங்கள் பெயரில் தாக்கலாகியுள்ள பட்டாவின் அடிப்படையில் பத்திரப்பதிவு செய்தும் இன்று வரை விவசாயம் செய்து ஆண்டு, அனுப வித்து வரும் நில உரிமை யாளர்கள் பெயரில் இருக்க வேண்டிய பட்டா, திருப்போரூரில் ரயத்து களிடமிருந்து வரி வசூல் செய்து, அரசாங்கத்திடம் செலுத்தி, கமிசன் அடிப் படையில் ஏஜெண்டாக பணி புரிந்த, இந்த நிலங்களின் மீது துளி அளவும் உரிமை இல்லாத, திருப்போரூர் கந்தசாமி கோயில் பெயரில் தவறுதலான பட்டா இருப்பதினால், விவசாயிகள் விவசாயம் சம்பந்தமாக மாநில அரசு மற்றும் ஒன்றிய அர சின் உதவிகள் ஏதும் பெற முடியாமல் மன உளைச்சல்களுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். ஆதலால், திருப்போ ரூர் கந்தசாமி கோயில் நிர்வாக த்தின் மோசடி செயல்களுக் கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் முதற்கட்ட விரைவு நட வடிக்கையாக பட்டா எண். 1- ஐ ரத்து செய்து, ‘0’ பட்டாவாக மாற்றம் செய்ய நடவடிக்கை எடுத்து, திருப்போரூர் நிலங்களை கள ஆய்வு மற்றும் ஆவண ஆய்வு செய்து பட்டாதாரரும் நில உரிமையாளருமான விவ சாயிகள் பெயரில் பட்டா வழங்கி, இருண்டு கிடக்கும் விவசாயிகள் மற்றும் குடிமக்களின் வாழ்வில் ஒளி ஏற்ற வேண்டும் என தெரிவித்துள்ளனர்.