districts

திண்டிவனத்தில்  விவசாயிகள் குறைதீர் கூட்டம்

விழுப்புரம், ஆக.22- விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் வரும் 24ஆம் தேதி விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் நடைபெற உள்ளதாக சார் ஆட்சியர் அமித் தகவல் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திண்டிவனம் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் வரும் 24ஆம் தேதி காலை 11 மணிக்கு திண்டிவனம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. கூட்டத்தில் திண்டிவனம், மரக்காணம், செஞ்சி, மேல்மலையனூர் வட்டத்தில் உள்ள விவசாயிகள், விவசாய பிரதிநிதிகள் கலந்து கொண்டு குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம் என அதில் கூறப்பட்டுள்ளது.

;