ராணிப்பேட்டை, செப்.3- ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் வட்டம், மருதாலம் மதுரா நீலகண்ட ராயன்பேட்டை பகுதியில் உள்ள அரசு பாறை மற்றும் பள்ள புறம்போக்கு நிலம் மலையடிவாரத்தில் 25 குடும்பத்தினர் வீடு கட்டி பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். சொந்தமாக ஒரு சென்ட் நிலம் கூட இல்லாமல் வாழ்க்கை நகர்த்தி வரும் அந்த மக்கள் வீட்டுமனைப் பட்டா இல்லாமல் அவதிப்படுகின்றனர். எனவே, கிராம மக்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க பட்டா வழங்க வேண்டும் என்று வருவாய் துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்துள்ளனர். கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது வரை எந்த நடவடிக்கையும் இல்லை. ஆகவே, மாவட்ட ஆட்சியர் உரிய நட வடிக்கை எடுத்து பட்டா வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க சோளிங்கர் வட்டார தலைவர் கே. ஜெய்சங்கர் தலைமையில் திங்களன்று (செப்.2) மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.