districts

img

பழங்குடி இருளர்கள் மீது பொய் வழக்கு விழுப்புரத்தில் அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டம்

விழுப்புரம், மார்ச் 20- புதுச்சேரி காட்டேரிக் குப்பம் காவல் நிலையத்தில் இரு சிறுவர்கள் உட்பட 7 இருளர்களை சித்திரவதை செய்து, அவர்கள் மீது பொய்வழக்கு போட்டு சிறை யில் அடைத்த காவல் துறையின் கொடூரமான செயலை கண்டித்து விழுப்புரம் பழைய பேருந்து  நிலையம் அருகே அனைத்து  கட்சிகள் சார்பில் திங்க ளன்று (மார்ச் 20) ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் பி.வி.ரமேஷ் தலைமை தாங்கினார். காங்கிரஸ் கட்சி யின் மாநில துணைத் தலை வர் எம்டி.குலாம்மொய்தீன், மனித நேய மக்கள் கட்சி யின் மாநிலச் செயலாளர் மு.யா.முஸ்தாத்தீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செய்தி தொடர்பாளர் கே.தமிம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் ஏ.சங்கரன், மா.நர சிம்மன் (மதிமுக) ஆகி யோர் பேசினர். அப்போது, பழங்குடி இருளர்களை சித்திரவதை செய்து பொய் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்த புதுச்சேரி - காட்டேரிக்குப்பம் காவல் உதவி ஆய்வாளர் சரண்யா  உள்ளிட்ட காவல் துறையி னர் மீதும், மயிலம் காவல்  நிலையத்தில் கண்டுபிடிக்க முடியாத திருட்டு வழக்கு களை பழங்குடி இருளர்கள் மீது பொய் வழக்குகளை பதிவு செய்யும் காவல் ஆய்வாளர் உள்ளிட்ட காவல் அதிகாரிகள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். இருளர்கள் மீது போடப் பட்டுள்ள அனைத்து பொய் வழக்குகளையும் திரும்பப் பெற்று, அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். பாதிக் கப்பட்ட பெண்கள் உள்ளிட்ட  அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். சிபிஐ புலன் விசாரணைக்கு உத்திரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இதில் இருளர் பழங் குடி பாதுகாப்பு சங்க தலை வர் க.சிவகாமி, பொதுச் செயலாளர் சு.ஆறுமுகம், பொருளாளர் மு.நாகராஜன் உட்பட பல்வேறு அரசியல்  கட்சியினரும், அமைப்பு களைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.

;