திருவள்ளூர், செப் 1- திருவள்ளூர் மாவட்ட டியூஜெ மற்றும் தீபம் கண் மருத்துவ மனை இணைந்து திருவள்ளூரில் வெள்ளியன்று (ஆக 30) பத்திரிகையாளர்களுக்கான இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தின. இந்த நிகழ்ச்சிக்கு கௌரவ தலைவர் தேவராஜன், மாவட்டச் செயலாளர் யுவ ராஜ், துணைத் தலைவர்கள் வி.பாஸ்கர், ஜி.ரமேஷ், எஸ்.சீனிவாசன் மற்றும் இணைச் செயலாளர்கள் எஸ்.சுரேந்தர், எஸ்.நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் எம்.ஏ. கருணாநிதி வரவேற்றார். மாவட்ட பொதுச் செயலாளர் பெ.ரூபன் துவக்க வுரையாற்றினார். இலவச கண் சிகிச்சை முகாமினை மாநிலத்தலைவர் பி.எஸ்.டி. புரு ஷோத்தமன், பொதுச் செயலாளர் கே.முத்து, மாநில இணைச் செயலாளர் ஆர். முருககனி, தீபம் மருத்துவமனை ஆப்ப ரேஷன்ஸ் மேலாளர் ஒமேகா கோபிநாத் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி துவக்கிவைத்தார். மாநில பொருளாளர் வந்தவாசி வி.ரவிச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். பத்திரிகையாளர் குடும்பத்திற்கு நிதி உதவி இதே நிகழ்வில் மறைந்த மூத்த பத்திரிகையாளர் முகமது கவுஸ் குடும்பத்திற்கு, திருவள்ளூர் மாவட்ட டி.யூ.ஜெ சார்பில் ரூ. 50 ஆயிரம் நிதி உதவி யினை அவரது குடும்பத்தினரிடம் மாநிலத் தலைவர் பி.எஸ்.டி. புருஷோத்தமன் வழங்கினார். மறைந்த மூத்த பத்திரிகையாளர் முகமதுகவுஸ் குழந்தைகளின் கல்வி செலவுகளை, எதிர்வரும் கல்வி ஆண்டி லிருந்து 5ஆண்டுகளுக்கு ஐ.ஆர்.சி.டி.எஸ். தொண்டு நிறுவனம் ஏற்றுக்கொள்ளும் என அறிவித்த நிறுவன இயக்குநர் ஸ்டீபன் முதல் தவணையாக, ரூ.10 ஆயிரத்துக்கு காசோலையை வழங்கினார். நிறைவாக மாநில நிர்வாகக்குழு உறுப்பினர்கே.வெங்கடேஷ்வரலு நன்றி கூறினார்.