districts

img

இருளர் காலனியில் மாலை நேர வகுப்பறை, குடிநீர் தொட்டி திறப்பு

திருத்தணி, செப் 13- திருத்தணி அடுத்த வீரகநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட பகத்சிங் நகர், இருளர் காலனிக்கு,  மாலை நேர பள்ளி வகுப்பறை கட்டிடத்தை திருத்தணி சட்ட மன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன் திங்களன்று (செப் 12) திறந்து வைத்தார். எல்.என். கண்டிகை இருளர் காலனி யில் பள்ளி குழந்தைகளுக்கு கல்வி உப கரணங்கள் விளையாட்டு பொருட்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில்  அஜித் குமார் மாலை நேர வகுப்பு ஆசி ரியர் மகேஸ்வரி, திமுக  ஒன்றிய செயலாளர் கள்  என்.கிருஷ்ணன். பா.ஆர்த்திரவி கோதண்டன், வேலாயுதம், தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கம் மாவட்ட தலைவர் சின்னதுரை ஆகியோர் பங்கேற்றனர். இறுதியாக பகத்சிங் நகர் இருளர் காலனி மக்கள் அடிப்படை கோரிக்கைகளான சிமெண்ட் சாலை, தெரு விளக்கு, பசுமை வீடு,  அங்கன்வாடி மையம் அமைத்தல் உள்ளிட்டகோரிக்கைகள் அடங்கிய மனு அளித்தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட சட்டமன்ற உறுப்பினர் உடனடியாக தெருக்களுக்கு மின்விளக்கு மற்றும் சிமெண்ட் சாலை ஆகியவற்றை சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து செய்து தருவதாக உறுதி அளித்தார்.  மலைவாழ் மக்கள் சங்கம் மாவட்ட குழு உறுப்பினர் அந்தோணி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.  மல்லிகா நன்றி கூறினார்.

;