districts

img

காமிக் பிரியர்களுக்கான ஆங்கில புத்தகம் வெளியீடு

சென்னை,பிப்.17 சென்னையில் முதல் முறையாக நடைபெற்ற காமிக் கான் இந்தியா விழாவில் பிரபல திரைப்பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ், காமிக் பிரியர்களுக்காக ‘‘எண்ட்வார்ஸ்: வால்யூம் 2 – டார்க் கான்குவெஸ்ட்’’ (Endwars:  Volume 2 – Dark Conquest) என்னும் ஆங்கிலப் புத்தகத்தை யும், ‘‘எண்ட்வார்ஸ்: தி சூஸன் ஒன்’’ (Endwars: The Chosen One - Volume 1) என்னும் மற்றொரு ஆங்கிலப் புத்தகத்தையும் வெளியிட்டார். மதன் கார்க்கியால் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட ‘‘இறுதிப்போர் – மண்ணவன் ஒருவன்’’ (Irudhipor – Mannavan Oruvan) என்னும் பெயரிடப்பட்ட இரண்டு புத்தகங்களையும் அவர் வெளியிட்டார்.  இந்த புத்தகங்களை  குயின்ஸ்லாந்து கேளிக்கை பூங்காவின் இயக்குநர் அமிர்தராஜ் செல்வராஜ் எழுதியுள்ளார்.   இந்நிகழ்ச்சியில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்  பேசுகையில்,  ஒரு திரைப்படத் தயாரிப்பாளர் என்பதைக்  கடந்து, ஒரு புத்தக வாசிப்பாளர் என்பதன் அடிப்படையில் இந்தக் கதைகள் என்னை வெகுவாக கவர்ந்துள்ளன என்றார்.