districts

img

தேசிய நெடுஞ்சாலையில் எரியாத மின் விளக்குகள்!

கிருஷ்ணகிரி, ஜூலை 6- கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டத்திற்கு உட்பட்ட தேசிய நெடுஞ்சாலைகள் பராமரிக்கப்படுவதில்லை. குறிப்பாக சாலை நடுவில் உள்ள மின் விளக்குகள் எரிவதே இல்லை. அதன் ஒரு பகுதியாக மாநகராட்சி எல்லைக்குள் உள்ள கிருஷ்ணகிரி பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அதியமான் கல்லூரி முதல் பெங்களூர் தமிழ் நாடு எல்லையான அத்திப் பள்ளி வரை 6 கிலோ மீட்டருக்கு மின் விளக்குகள்  கண்காட்சிக்கு வைக்கப் பட்டது போல் உள்ளது. இதனால் இச்சாலையில் அதிகமான விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. தேசிய நெடுஞ்சாலை யில் விளக்குகள் எரியாத தால் ஒரு வாரத்தில் 10 க்கும் மேற்பட்ட சிறு சிறு விபத்து கள் நடந்துள்ளன.  இச்சாலையில் மாலை நேரங்களில் இரண்டு மூன்று  முறை நெடுஞ்சாலை துறை கண்காணிப்பு வாகனம் சென்று வருகிறது. சோதனை சாவடி முன்பு கூட நெடுஞ் சாலையின் மின் விளக்கு கள் எரிவதில்லை. இருட்டில் வாகன பரிசோதனை  நடைபெற்று வருகிறது. ஆனால் தேசிய நெடுஞ் சாலை துறையினர், போக்குவரத்து துறையினர், மின் விளக்குகளை எரிய வைப்பதற்கு துளியும் அக்கறை எடுத்துக்  கொள்ளவில்லை. ஓசூர் சாராட்சியர், மாவட்ட ஆட்சியரும் உடனடி யாக தலையிட்டு விபத்துகளை தடுக்க மின் விளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டி களும், சமூக ஆர்வலர் களும் கோரிக்கை விடுத் துள்ளனர்.