சென்னை, ஜூன் 22- இந்தியாவில் திறமை யான கால்பந்தாட்ட வீரர் களை உருவாக்கும் வகை யில் பூமா மற்றும் இன்டர்நே ஷனல் ஸ்ட்ரைக்கர்ஸ் அகாடமியுடன் இணைந்து கால்பந்தில் திறமையான வீரர்களை உருவாக்கும் வகையில் பயிற்சி அளிக்க புட்பால் பிளஸ் அகாடமி திட்டமிட்டுள்ளது. இதற்காக தேர்வு செய்யப்படும் சிறந்த இரண்டு வீரர்களுக்கு 2 வாரங்கள் 100 விழுக்காடு உதவித்தொகையுடன் ஸ்பெயினில் ஒரு மாதம் பயிற்சி அளிக்கப்படும். இந்திய கால்பந்து கூட்டமைப் பின் அங்கீகாரத்தை பெற்றுள்ள புட்பால் பிளஸ் இளைஞர்களுக்கான கால்பந்து பயிற்சி மற்றும் அந்த விளையாட்டு தொடர் பாக அவர்களின் திறன் மேம்பாட்டிற்கு முக்கியத்து வம் அளித்து வருகிறது. இந்திய இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க உலகின் சிறந்த கால்பந்து வீரர்கள் விரைவில் இங்கு வரவுள் ளனர் என்று புட்பால் பிளஸ் நிறுவனரும் பயிற்சியாளரு மான நடவிட் ஆனந்த் கூறி யுள்ளார்.