districts

img

பயிற்சி முடித்தவர்களுக்கு மின் வாரிய பணி நியமனங்களில் முன்னுரிமை வழங்குக

சென்னை, மே 30 - தமிழ்நாடு மின்சார வாரியத்தில் தொழிற் பயிற்சி முடித்தவர்களுக்கு பணி நிய மனங்களில் முன்னுரிமை வழங்க கோரி திங்களன்று (மே 30) அண்ணாசாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மின்சார வாரியத்தில் அப்ரண்டிஸ் முடித்த ஐடிஐ, டிப்ளமோ, பிஇ பயின்ற வர்களுக்கு பணி நியமனங்களில் முன்னுரிமை வழங்க வேண்டும். அப்ர ண்டீஸ் சட்ட திருத்தம் 2014ன் படி, தொழில் நிறுவனங்களில் அப்ரண்டீஸ் முடித்தவர்களை பணி நியமனம் செய்வது தொடர்பான கொள்கை முடிவை அந்தந்த நிறுவனங்களே எடுக்கலாம் என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தின் போது செய்தியாளர்களிடம் அனைத்து மின்சார வாரியத்தில் தொழிற்பயிற்சி முடித்தோர் நல சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.நந்த குமார் கூறியதாவது: உயர்நீதிமன்ற தீர்ப்பை எடுத்துக்காட்டி, பயிற்சி முடித்தோருக்கு வேலை வழங்கு மாறு மின் துறை அமைச்சரை சந்தித்து வலியுறுத்தினோம். மாநிலம் முழுவதும் இருந்து முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு    10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்களை அனுப்பியுள்ளோம். சட்டமன்ற உறுப்பி னர்களில் பெரும்பாலனோரை சந்தித்து மனு கொடுத்துள்ளோம். இருப்பினும், வேலை நியமனம் குறித்து எந்த அறிவிப்பும் வெளி வரவில்லை. ஆகவே, வேலையின்றி தவிக்கும் எங்கள் கோரிக்கையை முதலமைச்சர் பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.