districts

ஜல்லி கட்டுபோராட்டத்தின்போது பார்வை பறிபோன வாலிபருக்கு இழப்பீடு தலைமை செயலர்,உள்துறை செயலருக்கு நோட்டீஸ்

சென்னை,  அக். 1- சென்னையில் 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகம் அருகில் உள்ள  ரோட்டரி நகர் குடிசை பகுதியில் காவல்துறையினர்  நுழைந்து  தாக்குதல் நடத்தியதில் கார்த்திக்  என்ற வாலிபரின் இடது கண் பார்வை பறிபோனது.  தனது மகனுக்கு நேர்ந்த கொடுமை குறித்து அவரது தந்தை முனுசாமி சென்னை  உயர்நீதிமன்றத்தில்  இழப்பீடு கோரியும், மீண்டும் கண் பார்வைக்கு அரசே சிகிச்சை  அளிக்க உத்தரவிடவேண்டும் என்று மனு தாக்கல் செய்தார்.  இந்த மனு நீதிபதி சதீஸ் குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.  உடனடியாக சிறுவனுக்கு கண் பார்வை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென நீதிபதி உத்தரவிட்டார். இரண்டு மாத கால அவகாசம் கொடுத்தார். ஆனால் எந்த நட வடிக்கையும் இல்லை. எனவே தமிழக அரசுக்கு எதிராக  நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.  அதில் தலைமை செயலாளர் , உள்துறை செயலர் பணீந்திர ரெட்டி, சென்னை ராஜீவ்காந்தி அரசு தலைமை மருத்துவமனை முதல்வர் தேரனி ராஜன், எழும்பூர் கண் மருத்துவமனை இயக்குநர் பிரகாஷ் ஆகியோருக்கு நீதி மன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி   உத்தரவிட்டார். பின்னர் வழக்கு விசார ணையை தள்ளிவைத்தார்.

;