திருத்தணி, ஜன 6- திருத்தணியை அடுத்த தரணிவராகபுரம் ஊராட்சியில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 60 குடும்பங்கள் வசிக்கின்றனர். இந்த மக்களுக்கு ஊராட்சி நிர்வாகத்தால் வழங்கப்படும் குடிநீர் உப்பு நீராக உள்ளது. நல்ல தண்ணீர் தேடி மாற்று சமூகத்தினர் வசிக்கும் பகுதிக்கு சென்றால், அங்கு தண்ணீர் பிடிக்க கூடாது என சட்ட ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் எழுகிறது. இது குறித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் திருவள்ளூர் மாவட்ட தலைவர் இ.எழிலரசன், மாவட்ட செயலாளர் த.கன்னியப்பன், துணை நிர்வாகிகள் ஏ.அப்சல் அகமது, ரகுபதி ஆகியோர் அந்த கிராமத்திற்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டனர். தலித் மக்களை பாகுபாட்டு டன் நடத்தப்படுவதாக புகார் வந்ததையடுத்து திருத்தணி வட்டார வளர்ச்சி அலுவலரை சந்தித்துப் பேசினர். தலித் மக்களின் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப் பட்ட வேண்டும், வாரத்தின் அனைத்து நாட்களிலும் நூறு நாள் வேலை வழங்க வேண்டும், பணித்தள பொறுப்பா ளரை சுழற்சி முறையில் நியமிக்க வேண்டும், தூய்மை பணி யாளர்களை நியமிக்க வேண்டும், கழிவுநீர் கால்வாயை சீரமைக்க வேண்டும் என அதிகாரியிடம் வலியுறுத்தினர்.