districts

ஒரு லட்சம் ஆக்ட்அப்ரண்டீசுகள் பணியை நிரந்தரமாக்கியவர் தோழர் பாசுதேவ் ஆச்சார்யா

சென்னை,நவ.13- சிஐடியு முன்னாள் அகில இந்திய துணை தலைவரும் 1980 முதல் 2014 மக்களவை உறுப்பினருமான பாசுதேவ் ஆச்சார்யா மறைவுக்கு தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் (டிஆர்இயூ) அஞ்சலிதெரிவித்துள்ளது. ஏழை தொழிலாளி, எளிய விவசாயி களின் பிரச்சனைகளை எழுப்புகின்ற மன்ற மாக நாடாளுமன்றத்தை மாற்றியவரும்   எண்ணற்ற தொழிற்சங்க போராட்டங்க ளுக்கு தலைமை தாங்கியவருமான தோழர் பாசுதேவ் ஆச்சார்யா திங்களன்று ஐதராபாத்தில் காலமானார்.  நாடாளுமன்றத்தில்  நிலைக்குழு  தலைவராகவும் பெட்டிஷன் கமிட்டி தலைவராக்கவும் செயல்பாட்டஅவரால் தெற்கு ரயில்வேயில் 5000க்கும் மேற்பட்ட ஆக்ட் அப்பரெண்டிஸ்களையும் இந்திய ரயில்வே முழுவதும் ஒரு லட்சம் ஆக்ட் அப்பரெண்டிஸ் களையும் நிரந்தர ரயில்வே ஊழியர்களாக மாற்ற உதவியவர். ரயில் ஓட்டுநர்களின் அவல நிலை களுக்கு தீர்வு கண்டவர். ரயில் பயணி களுக்கு பாதுகாப்பான பயணம், போதுமான  ரயில் வசதி, அதிக ரயில்கள், காலியிடங் களை நிரப்பி வேலை வாய்ப்பு வழங்கு, ரயில்வே துறைக்கு பொது பட்ஜெட்டில் இருந்து கூடுதல் நிதி ஒதுக்கு என ரயில்வே பட்ஜெட் மீதான உரையில் பேசினார்.   எல்லாவற்றிற்கும் மேலாக 1990  முதல் கடைபிடித்து வரும் தனியார் மய,  தாராளமய, உலகமய கொள்கைகளு கெதிராக நாடாளுன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் கர்ஜித்தவர் பாசுதேவ் ஆச்சார்யா. அவரது  மறைவிற்கு டிஆர்இயூ   மத்திய சங்கம் ஆழ்ந்த அஞ்சலியை  செலுத்துவதாக அதன் பொதுச்செயலா ளர் வி. ஹரிலால் ஓர் அறிக்கையில் தெரிவித் துள்ளார்.