மக்கள் சேவையிலும் பல்வேறு துறையில் சாதனை புரிந்தவர்களுக்கு நோ ஹங்கர், ராக், ஈவன்ஸ் ஆகிய அமைப்புகள் சார்பில் ஆண்டு தோறும் டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல் கலாம் ஊக்கமளிக்கும் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான விருதை சமூக செயல்பாட்டாளர்கள் முகவை கண்ணப்பன் (சிறந்த துப்பறிவாளர்), கோமதி ஆண்டியப்பன் (சிறந்த யோகா ஆசிரியர்), வழக்கறிஞர் பாரதி (சிறந்த உள்ளடக்க எழுத்தாளர்) ஆகியோருக்கு வழங்கப்பட்டது. இவ்விழாவில் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன், காவல்துறை உயர் அதிகாரிகள் கே.பிரபாகர், சிவகுமார், கே.மகேஸ்வரி உள்ளிட்ட திரைக்கலைஞர்கள் பலர் பங்கேற்றனர்.