districts

மும்பை போல் மாநகர போக்குவரத்து  கழகத்தை நாசமாக்காதீர்: தொழிலாளர்கள்

சென்னை, மார்ச் 4- 8 அரசு போக்குவரத்து கழகத்திலேயே சென்னை பெருநகர போக்குவரத்து கழகம் தான் பெரியது.  இங்கு 20 ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள்.  இந்நிலையில் மேலும் 1000 பேருந்துகளை "கிராஸ் காஸ்ட் ஒப்பந்த" அடிப்படையில் தனியாருக்கு கொடுக்க மாநகர போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது. தனி யாருக்கு சொந்தமான பேருந்துகளை இயக்கவும் அதற்கான செலவை ஒரு கிலோ மீட்டர் அடிப்படையில் நிர்ணயம் செய்து வழங்கவும் போக்குவரத்து கழகம் திட்டமிட்டு உள்ளது.  "உலக வங்கி உதவியுடன் இத்திட்டம் செயல்படுத்தப்ப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு 500 பேருந்து களும் 2025-ம் ஆண்டில் 500 பேருந்துகளும் தனியார் இயக்க அனுமதிக்கப்பட உள்ளது. 'கிராஸ் காஸ்ட்' ஒப்பந்தத்தின் அடிப்படையில் பேருந்துகளை தனியார் வழங்கவும், ஓட்டுநர்,நடத்துநர் மற்றும் பராமரிப்பு செலவு, உதிரிபாகங்கள் கொள்முதல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.  இதுகுறித்து மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறும்போது, இத்திட்டம் ஆரம்ப கட்டத்தில் தான் உள்ளது. உலக வங்கி நிதி உதவியுடன் செயல்படுத்த உள்ளது. விரை வில் இதற்கான அரசாணை வெளியிடப்படும். அதன்பிறகு தான் எந்த அடிப்படையில் இத்திட்டத்தை செயல்படுத்துவது என்பது தெளிவாக தெரியவரும் என்றனர்.   இதுகுறித்து சி.ஐ.டி.யு. தொழிற்சங்க தலைவர் ஆறுமுக நயினார் கூறுகையில், தனியாருக்கு போக்கு வரத்து கழகத்தை கொடுப்பதற்கு ஒரு முன்னோட்டமாக இதனை கருதுகிறோம். இதனால் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள். மும்பை உள்ளிட்ட சில மாநிலங்களில் அரசு போக்குவரத்து கழகத்தை தனி யாருக்கு கொடுத்து நாசப்படுத்திவிட்டனர். அந்த நிலை  தமிழகத்திலும் ஏற்படவேண்டுமா என கேள்வி எழுப்பி னார்.

;