districts

img

சாமணப்பள்ளியில் சிதிலமடைந்த தலித் மக்கள் குடியிருப்புகள்

கிருஷ்ணகிரி, ஜன.19- கிருஷணகிரி மாவட்டம், சூளகிரி அரசு பேருந்து நிலையத்திலிருந்து உத்தனப்பள்ளி செல்லும் சாலையில் உள்ளது சாமணப்பள்ளி கிராமம். இங்கு 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளனர். இந்த கிராமத்தின் தெற்கு கடைசியில் உள்ள தலித் மக்கள் காலனி யில் 40 குடும்பத்தைச் சேர்ந்த 130 பேர் 26 வீடுகளில் வசிக்கின்றனர்.  இந்த தொகுப்பு வீடுகள் 20 ஆண்டு களுக்கு முன்பு ஆதிதிராவிட நலத் துறையால்  கட்டித்தரப்பட்டது. பல வீடுகளில் மூன்று சந்ததியினர் 12 பேர் வரை வசிக்கின்றனர். அனைத்து வீடு களும் பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சிதி லமடைந்து விரிசல் விட்டு காணப்படுகிறது. 3 வீடுகள் சுவர்கள் இடிந்து பாழடைந்து கிடக்கிறது.மழை காலங்களில் அனைத்து வீடுகளிலும்  மேற்கூரை வழியாகவும் ஈரமான சுவர்கள் வழியாகவும் மழைநீர் கசிந்து வருவதாக கூறுகின்றனர். மின் இணைப்புகள் மிகவும் பழுத டைந்து மழை காலங்களில் மின் கசிவு ஏற்படுகிறது.பல வீடுகளில் மின் இணைப்பு பழுதானதால் மின் விளக்குகள் எரிவதில்லை எனவும் தெரிவித்தனர். இந்நிலையறிந்து இந்த வீடுகளை புதிய வீடுகளாக கட்டித்தர வேண்டும் அடிப்படை சுகாதார வசதிகள் செய்து தர வேண்டும் என்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவர் ஆனந்த குமார்,செயலாளர் நாகேஷ்பாபு ஆகி யோர் மாவட்ட ஆட்சியருக்கும் ஆதி திராவிடர் நலத்துறைக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.