ஓய்வூதியர்களுக்கு 81 மாத கால அகவிலைப்படி உயர்வு வாங்காததையும், ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு ஓய்வு நாளில் பண பலன்களை வழங்க கோரி சனிக்கிழமையன்று (ஜூலை 31) பல்லவன் இல்லம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் சென்னை கிளை தலைவர் எம்.நீலமேகம், செயலாளர் கே.வீரராகவன், பொருளாளர் எம்.ஏ.முத்துகுமார் உள்ளிட்டோர் பேசினர்.