புயல் மழையால், உயிரிழந்த குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கவேண்டும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் சிபிஎம் கோரிக்கை
காஞ்சிபுரம், டிச.2 - காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயல் மழையினால் மனித உயிர்பலி ஏற்பட்டுள்ளது, நெல் பயிர்கள் நீரில் முழுகியும், கால்நடைகள் பதிப்படைந்தும், பல்வேறு இடங்களில் பொதுமக்கள் அரசு முகாம்களில் வைக்கப்பட்டுள்ளனர் மேலும் புயலால் வீடுகள் சேதாரம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட முழுவதும் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், விவசாயிகளை சரியான முறையில் கணக்கு எடுத்து நிவாரணம் தமிழக அரசு மூலம் பெற்றுத்தர காஞ்சி புரம் மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி காஞ்சிபுரம் மாவட்டக்குழு சார்பில் மாவட்டச் செயலாளர் கே.நேரு கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சிருக்கு அவர் அனுப்பியுள்ள மனுவில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை வெள்ளத்திற்கு 2 நபர்கள் உயிரிழந்துவிட்டனர். அவர்களது குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவும், இடிந்த வீடுகளுக்கும், குடிசைகளுக்கு ரூ.50 ஆயிரமும், இறந்த கால்நடைகளுக்கு ஒரு மாட்டிற்கு ரூ.50 ஆயிரமும், ஆடு ஒன்றுக்கு ரூ.10ஆயிரமும் வழங்க வேண்டும். அரசு முகாம்களில் தங்கியுள்ள குடும்பங்களுக்கும், மழை நீர் சூழ்ந்து இருக்கும் குடும்பத்தினருக்கும் உணவுப்பொருட்கள், குடிதண்ணீர் உள்ளிட்டவைகள் வழங்க வேண்டும். அறுவடைக்கு இருந்த நெற்பயிர்கள் சுமார் 3500 ஏக்கருக்கு மேல் நீரில் மூழ்கி உள்ளது. மேலும் கரும்பு, வேர் கடலை, காய்கறிகள், வாழை உள்ளிட்ட விளைப் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்ட வருவாய் துறையும், வேளாண்துறையும் இணைத்து சரியான முறையில் பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கெடுப்பு செய்து நெல்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம், மற்ற பயிர்களுக்கு பாதிப்புக்கு ஏற்றவாறு நிவாரணம் வழங்கவேண்டும். மழைநீர் தேங்கி உள்ள பகுதிகளில் மருத்துவ முகாம் நடத்தவேண்டும், பொது மக்களுக்கு தொற்று நோய் ஏற்படாமல் பாது காக்கவேண்டும், குன்றத்தூர் வட்டத்தில் வரதராஜபுரம் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் மழைநீர் தேங்கி உள்ளதை அப்புறப்படுத்த வேண்டும் என அந்த மனுவில் அவர் குறிப்பிடப் பட்டுள்ளார்.
சொகுசு காரில் அழுகிய நிலையில் ஆண் சடலம்
சென்னை, டிச.2- சென்னை வளசரவாக்கம் காவல் நிலையம் பின்புறம் நின்றிருந்த காரில் இருந்து அழுகிய நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை வளசரவாக்கம் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையத்தின் பின்புறம் உள்ள ராஜகோபால் தெரு பகுதியில் பிஎம்டபுள்யூ கார் நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த காரில் திங்களன்று அதிகாலை துர்நாற்றம் வீசியதாக தகவல் வந்துள்ளது. இதனை அடுத்து அப்பகுதி வழி யாக சென்ற அக்கம் பக்கத்தினர் துர்நாற்றம் அதிகளவில் வருவதை கண்டு அருகே உள்ள காவல் நிலை யத்திற்கு தகவல் தெரிவித்தனர். தக வலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வளசரவாக்கம் போலீசார் காரை திறந்து பார்த்தபோது அழுகிய நிலையில் ஆண் சடலம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர் உடனடியாக ஆம்புலன்சை வரவழைத்த போலீசார் காருக்குள் இறந்த அழுகிய நிலையில் இருந்த சடலத்தை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். அந்த கார் பாண்டிச்சேரி பதிவெண் கொண்டது. மரணம் குறித்து பல்வேறு கோணங்களில் தற்போது வளசரவாக்கம் போலீசார் விசா ரணையை மேற்கொண்டு வருகின்ற னர். மேலும் அந்த உடலானது இறந்து 10 நாட்கள் ஆகியிருக்க லாம் என்றும் தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது. தற்போது கார் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்தின் அருகாமையில் உள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
புயல் பாதிப்பால் ரயில்கள் ரத்து
சென்னை, டிச.2- ஃபெஞ்சல் புயல் காரணமாக கடந்த நான்கு நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் தொடர் கனமழை பெய்து வந்தது. இந்நிலையில் இந்த புயல் சனிக்கிழமை இரவு (நவ.30) புயல் கடல் கரையை கடந்த நிலையில் ஒருவழியாக அனைத்து மாவட்டகளும் இயல்பு நிலைக்கு திரும்ப ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் கனமழை பொழிவின் காரணமாக தமிழகத்தில் ஆங்காகே உள்ள நீர் நிலைகள் நிரம்பும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் ஆறு போன்ற நீர் நிலை வழியாக உள்ள ரயில் பாதைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் ரயில் சேவைகள் திங்களன்று( டிச.2) ரத்து செய்யப்பட்டன. இதன் அடிப்படையில், விக்கிரவாண்டி மற்றும் முண்டியம்பாக்கம் இடையே உள்ள ரயில் பாலத்தில் அபாய அளவைத் தாண்டி தண்ணீர் உயர்ந்திருப்பதால், பின்வரும் பல எக்ஸ்பிரஸ் ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டன.
முழு கொள்ளளவை எட்டும் புழல் ஏரி
சென்னை, டிச.2- ஃபெஞ்சல் புயல் காரண மாக தொடர்ந்து மழை பெய்த நிலையில் புழல் ஏரி முழு கொள்ளவை எட்ட உள்ளது. புழல் ஏரியின் மொத்த உயரமான 21 அடியில் தற்போதைய நீர்மட்டம் 18.54 அடியாக உள்ளது. சென்னை மக்களின் குடி நீர் தேவைக்காக விநாடிக்கு 184 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வரு கிறது. புழல் ஏரிக்கான நீர்வரத்து விநாடிக்கு 999 கனஅடியாக உள்ள நிலை யில் 999 கன அடி நீர் வெளி யேற்றப்படுகிறது. மொத்தம் 3300 மில்லி யன் கனஅடி கொண்ட புழல் ஏரியின் தற்போதைய நீர் இருப்பு 2,718 கன அடியாக உள்ளது. சென்னை, காஞ்சி புரம், செங்கல்பட்டு, திரு வண்ணாமலை, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 1022 ஏரிகளில் 315 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டின அதே போல் காஞ்சி புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள 909 ஏரிகளில் 309 ஏரி கள் நிரம்பி உள்ளதாக பொதுப் பணித்துறை தெரி வித்துள்ளது.
அண்ணாமலை பல்கலை.கழக தேர்வுகள் ரத்து
சிதம்பரம், டிச.2- கடலூர் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கனமழை மற்றும் பெண்ணையாற்றில் வரலாறு காணாத வெள்ள நீர் செல்வதால சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகம் டிச.3 ஆம் தேதி விடுமுறை அறிவித்துள்ளது.கட லூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள அனைத்து உறுப்பு கல்லூரி களிலும் நடைபெற உள்ள தேர்வுகள் ரத்து செய்யப்படு வதாகவும், பின்னர் தேர்வு நடைபெறும் தேதி அறிவிக்கப்படும் என பல்கலைக்கழகம் நிர்வாகம் அறிவித்துள்ளது.
தென்பெண்ணை ஆற்றில் வரும் நீரின் அளவு அதிகரிப்பு
கடலூர், டிச.2- தென்பெண்ணை ஆற்றில் வரும் நீரின் அளவு வினாடிக்கு 2.45 லட்சம் கன அடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, 1.7 லட்சம் கன அடியாக வந்து கொண்டிருந்த நிலையில் அது, 2.4 லட்சமாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக கடலூர் -புதுச்சேரி -சென்னை சாலை துண்டிக்கப்பட்டது. பெரியகங்கணாங்குப்பம் என்ற இடத்தில் சாலையில் அளவுக்கு அதிகமாக தண்ணீர் செல்வதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு உள்ளே யும் தற்போது தண்ணீர் செல்ல தொடங்கி உள்ளது. தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. மேலும் பல இடங்க ளில் உடைப்பு ஏற்படக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலை, கஷ்டம் சாலை குண்டு உப்பலவாடி சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் மாவட்டத்தில் செவ்வாய் கிழமை (டிச.3) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பதாக மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தெரி வித்துள்ளார்.
பண்ணை தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை
ராணிப்பேட்டை, டிச.2- ராணிப்பேட்டை மாவட்டத்தில் விவசாயி கள் குறைதீர் நாள் கூட்டம் வெள்ளியன்று (நவ. 29) மாவட்ட ஆட்சியர் ஜெ.யு. சந்திர கலா தலைமையில் நடைபெற்றது. இதில் விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எல்.சி. மணி, பொரு ளாளர் சி. ராதாகிருஷ்ணன், சேகர் உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு விவசாயிகள் சந்தித்து வரும் பிரச்சனைகளை மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு வந்தனர். அப்போது ராணிப்பேட்டை மாவட்டத்தில் நவ்லாக் அரசு பண்ணை செயல்பட்டு வருகிறது. தமிழக அரசு 10 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்படும் என்று அரசு ஆணை அவ்வப்போது வெளியிடப்பட்டும் அங்குள்ள அதிகாரிகள் பெயரளவுக்கு பட்டியல் ஒன்றை தயாரித்து அனுப்பி வைப்பார்கள். சென்னை தலைமை அலுவலகத்தில் இருந்து போதிய தரவுகள் இல்லை, புள்ளிவிவரங்கள் போதாது, இந்த வகையில் அமையவில்லை என திருப்பி, திருப்பி அனுப்பப்படுகிறது. தமிழகத்தில் இதர பண்ணைகளில் வயது வரம்பு ஏதும் நிர்பந்திக்காத நிலையில் தமிழகத்தின் இதர பண்ணைகளில் பத்தாண்டுகள் பணி முடித்தவர்களுக்கு பணி நிரந்தரம் செய்துள்ள நிலையில் இந்த நவ்லாக் பண்ணை தொழிலாளர்களுக்கு மட்டும் ஏன் இந்த பாரபட்சம் காட்டப்படு கிறது. ஆகவே 10 ஆண்டுகள் பணி முடித்த அனைத்து பண்ணை தொழி லாளர்களையும் உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கோரிக்கை விடுத்தனர்.