districts

img

பாதுகாப்புத்துறை ஊழியர்கள் உண்ணாநிலை போராட்டம்

அம்பத்தூர், ஜன. 8- பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி நாடு முழுவதும் உள்ள பாதுகாப்புத் துறை நிறுவன தொழிலாளர்கள் திங்கட்கிழமை முதல் 11ஆம் தேதி வரை தொடர் உண்ணாநிலை போராட்டத்தை துவக்கியுள்ளனர். ஆவடியில் உள்ள மத்திய பாது காப்புத் துறையின் கீழ் இயங்கும் ஓசிஎப், எச்விஎப், இன்ஜின் தொழிற்சாலை ஊழியர் சங்கங்கள் சார்பில் பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி ஆவடி ஓசிஎப் அனைத்து சங்கங்கள் மற்றும் அசோசி யேஷன்களின் கூட்டுப் போராட்டக் குழு சார்பில், படைத்துறை உடைத் தொழிற்சாலையில் உண்ணாநிலை போராட்டம் திங்களன்று (ஜன. 8) துவங்கியது. அகில இந்திய பாதுகாப்புத் துறை ஊழியர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சி.ஸ்ரீகுமார் தொடங்கி வைத்தார். தொமுச பொதுச்செயலாளர் ஏ.முகம்மது மீரா வாழ்த்திப் பேசி னார். இதில் சங்க நிர்வாகிகள் என்.ஜெ.ராமன், காளிதாசன், தேவ ராஜ், வில்சன் கிறிஸ்டோபர், குமார், ஜெயமூர்த்தி, வரலட்சுமி, அசோக்  குமார் உள்ளிட்ட 100க்கு மேற்பட்ட தொழிலாளர் கலந்து கொண்டுள்ளனர். மேலும் ஆவடி டேங்க் பேக்டரி, இன்ஜின் தொழிற்சாலை, போர் ஊர்தி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் ஆகிய பகுதி யிலும் உண்ணாநிலை போராட்டம் நடைபெறுகிறது. சங்க நிர்வாகிகள் முரளிதரன், முத்துகருப்பன், சிவக்குமார், கிருபானந்தம், விஜய சீலன், அந்திரிதாஸ், சந்திரமோகன், சரவணன், ரங்கராஜன், கஜேந்திரன் மற்றும் ஆவடி மாநகராட்சி துணை மேயர் எஸ்.சூரியகுமார் உள்ளிட்ட 200க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். அதே போல், ஆவடி டேங்க் பேக்டரியில் ஐஎன்டியுசி அமைப்பைச் சேர்ந்த நேஷனல் ஒர்க்கர்ஸ் யூனியன் சார்பில் உண்ணாநிலை போராட்டம் நடைபெறுகிறது. இதை ஐஎன்டி  டபிள்யூஎப் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஆர்.சீனிவாசன் தொடங்கி வைத்தார். இதில் நிர்வாகி கள் நிர்மல்குமார், நாகப்பன், ஜெய்சங்கர், ரூபேஷ்குமார், திரு நாவுக்கரசு, சுரேஷ், வேல்முருகன், செல்லத்துரை, அரி உள்ளிட்ட 100க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.