districts

img

ஏரி சங்க தேர்தலுக்கு கால அவகாசம்: விவசாயிகள் சங்கம்

விழுப்புரம், ஜூலை 4- ஏரி சங்கத் தேர்தலுக்கு கால அவகாரம் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து விழுப்புரம் மாவட்டச் செயலாளர் ஆர்டி.முருகன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- விழுப்புரம் மாவட்டத்தில் பொதுப்பணி துறைக்கு சம்பந்தமான ஏரிகள், நீர்நிலைகள் வரத்து வாய்க்கால்கள் தூர்ந்து போய் புதர் மண்டி கிடக்கிறது.  மழைக்காலம் துவங்க உள்ள நிலையில் ஏரிகளை நீர் நிலைகளை புனரமைக்க வேண்டும். குறிப்பாக கடந்த அதிமுக ஆட்சியில் குடிமராமத்து பணி என்கிற திட்டத்தின் மூலம் உண்மையான விவசாயிகள் அடங்கிய சங்கங்களை அமைக்காமல் ஆளுங்கட்சியினரின் லாப வேட்டைக்கு ஒரு போலியான சங்கங்களை அமைத்து அரைகுறையாக நீர் நிலைகளை தூர்வாரி கணக்கு காண்பிக்கப்பட்டது. ஆனால், புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு, ஏரி நீரினை பயன்படுத்துவோர் சங்கங்களை அதன் தலைவர்களையும் ஆட்சி மண்டல குழு உறுப்பினர்களையும், தேர்ந்தெடுப்பதற்கு அறிவிப்பு செய்துள்ளது. இது வரவேற்கத்தக்கது. ஆனால், போதிய கால அவகாசம் வழங்காமல் அவசரக்கோலத்தில் நீர்வள ஆதார அமைப்பு மூலம் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது.  குறிப்பாக, மனுத்தாக்கல் செய்ய வேண்டியது 2.7.2022 அன்று தான் ஏரி சங்கங்களின் தேர்தல் நடைபெறுகிறது என்கிற தகவல் விவசாயிகளுக்கு தெரிய வருகிறது. எனவே போதிய கால அவகாசத்துடன் விளம்பரம் கொடுத்து தேர்தலை நியாயமாகவும், நேர்மையுடனும் நடத்த வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

;