districts

img

ஆளுநர்கள் மூலம் எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களை மிரட்டும் ஒன்றிய அரசு

சென்னை, மார்ச் 26- ஆளுநர்கள் மூலம் எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களை ஒன்றிய அரசு மிரட்டுவதாக டி.கே.எஸ்.இளங்கோவன் தெரி வித்தார். வட சென்னை மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளர் கலாநிதி வீரா சாமி போட்டியிடுகிறார். இதையொட்டி சென்னை கிழக்கு மாவட்டம் கொளத்தூர் மேற்கு பகுதி சார்பில் வேட்பாளர் அறி முகக் கூட்டம் மற்றும் செயல் வீரர்கள் கூட்டம் பகுதிச் செயலாளர் ஏ.நாக ராசன் தலைமையில் நடை பெற்றது. தொகுதி பொறுப்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் பேசுகையில், ஒன்றிய ஆளு நர்கள் மூலம் மாநில அரசு களை மிரட்டுவதோடு, நலத்திட்டங்களுக்கும் ஒப்புதல் அளிக்க மறுக்கிறார். மேலும் ஆளு நர்கள் செல்லும் இட மெல்லாம் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தங்களை பரப்புவ தோடு, இங்குள்ள தலை வர்களையும் இழிவுபடுத்தி பேசி வருகிறார் என்று குற்றம் சாட்டினார். அரசியல் அமைப்பு சட்டங்களை, ஜன நாயகத்தை, சமூக நீதியை மீட்டெடுக்க பாஜகவை வீழ்த்தியாக வேண்டும். எனவே வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து பாஜக வின் தேர்தல் பத்திர முறை கேடு, சமூக நீதிக்கு எதி ரான செயல்பாடு, மக்களை பிளவுபடுத்தும் நட வடிக்கைகளை எல்லாம் எடுத்துக் கூறி வாக்கு சேகரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செய லாளர் எல்.சுந்தரராஜன், காங்கிரஸ் மாவட்ட தலை வர் ஜெ.டில்லிபாபு, வி.ரவி (சிபிஐ), சு.ஜீவன் (மதி முக), து.அப்புன் (விசிக), மாவட்டத் தலைவர் எம்.மொய்தீன் (மனிதநேய மக்கள் கட்சி), பாண்டியன் (திராவிடர் கழகம்), கோ. மோகன் (மக்கள் நீதி மய்யம்) உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பேசினர். இதில் மேயர் ஆர்.பிரியா, திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் சி.மகேஷ்குமார், கொளத்தூர் கிழக்கு பகுதி செயலாளர் வ.முரளிதரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பா.ரங்கநாதன், இரா.விடுதலை, சிபிஎம் பகுதிச் செயலாளர் பா.ஹேமாவதி, எஸ்.அன்சாரி மதார் (இயூமுலீக்), ஜி.சுப்பிரமணி (சிபிஎம்) உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.