மார்க்சிஸ்ட் கட்சியின் வளர்ச்சிக்காக தளி ஒன்றியத்தில் வீடு வீடாக சென்று நிதி வசூலித்தனர். இதன் மூலம் வசூலான ரூ. 1 லட்சத்து 76 ஆயிரத்து 500 ரூபாய் ஒன்றியச் செயலாளர் நடராஜன்,மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.சேகர், ஒன்றியக் குழு உறுப்பினர் அனுமப்பா ஆகியோர் மாவட்டச் செயலாளர் சி.சுரேஷிடம் வழங்கினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பிரகாஷ், ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி, மாவட்டக் குழு உறுப்பினர் இருதயராஜ், சூளகிரி வட்டச் செயலாளர் முருகன், அஞ்செட்டி வட்டக்குழு உறுப்பினர் குமாரவடிவேல் உடன் இருந்தனர்.