districts

img

புதுச்சேரியில் வைத்திலிங்கத்தை ஆதரித்து சிபிஎம் பிரச்சாரம்

புதுச்சேரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து நெட்டப்பாக்கம் தொகுதி முழுவதும் சிபிஎம் சார்பில் பிரச்சாரம் நடைபெற்றது. பிரச்சாரத்தில்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு  த.தமிழ்ச்செல்வன், பாகூர் கொம்யூன் செயலாளர்  ப. சரவணன், மாநிலக்குழு அ.இளவரசி,  கிளைசெயலாளர்கள்  மு. சதாசிவம், கு.செங்குலத்தான்,திமுக துணை அமைப்பாளர் திருநாவுக்கரசு, காங்கிரஸ் நிர்வாகி  ராஜசேகர் உட்பட பலர் பங்கேற்றனர்.