districts

img

சிபிஎம் 23வது மாநில மாநாடு சென்னையில் செங்கொடி ஏற்றி பிரச்சாரம்

சென்னை, மார்ச் 23 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் 23ஆவது மாநில மாநாட்டை யொட்டி சென்னையில் புதனன்று (மார்ச் 23) நூற்றுக்கணக்கான இடங்க ளில் செங்கொடி ஏற்றப்பட்டது. கட்சியின் 23ஆவது மாநில மாநாடு மார்ச் 30-32, ஏப்.1 ஆகிய  தேதிகளில் மதுரையில் நடைபெறு கிறது. இதனையொட்டி தமிழகம் முழு வதும் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் நினைவு தினமான மார்ச் 23ந் தேதி கொடி நாளாக கடைபிடிக்கப்பட்டது. 23வது மாநில மாநாட்டை குறிக்கும் வகையில் ஒரே இடத்தில் 23 செங்கொடிகளை ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது. சென்னையில் நூற்றுக்கணக்கான மையங்களில் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகி யோரது உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தி, செங்கொடி ஏற்றி கட்சி  ஊழியர்கள் பிரச்சாரத்தை தொடங்கினர்.
தென்சென்னை
தென்சென்னை மாவட்டத்தில் சுமார் 100 மையங்களில் கொடி யேற்றப்பட்டது. வேளச்சேரி பகுதி, தரமணியில் நடைபெற்ற நிகழ்ச்சி யில் ஒரே நேரத்தில் 23 தலைவர்கள் 23 செங்கொடிகளை ஏற்றி வைத்த னர். இந்த நிகழ்வில் மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத், மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், மாநிலக்குழு உறுப்பினர் க.பீம்ராவ், செயற்குழு உறுப்பினர்கள் கே.வனஜகுமாரி, சுந்தர், பகுதிச் செயலாளர் ரஃபி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மத்திய சென்னை
மத்தியசென்னை மாவட்டத்தில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் கொடி யேற்றும் நிகழ்வு நடைபெற்றது. ஆயிரம் விளக்கு பகுதி புஷ்பா நகரில்  நடைபெற்ற நிகழ்வில் அரசியல்  தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராம கிருஷ்ணன் கொடியேற்றினார். மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கே.முருகேஷ், இ.சர்வேசன், பகுதிச் செயலாளர் வே.இரவீந்திரபாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வில்லிவாக்கத்தில் மூத்த தலைவர் வே.மீனாட்சிசுந்தரம் கொடியேற்றி வைத்தார்.
வடசென்னை
வடசென்னை மாவட்டத்தில் 35க்கும் மேற்பட்ட இடங்களில் கொடி யேற்றப்பட்டது. அதன் ஒருபகுதி யாக மாவட்டக் குழு அலுவலகத்தில் நடைபெற்ற கொடியேற்றும் நிகழ்வில் மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன், செயற்குழு உறுப்பி னர் எம்.ராமகிருஷ்ணன் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.

;