செங்கல்பட்டு, செப். 9- காட்டாங்குளத்தூர் எஸ்ஆர்எம் கலை அறிவியல் கல்லூரியின் 26ஆவது பட்ட மளிப்பு விழாவில் தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் வெ. இறை யன்பு கலந்து கொண்டு 864 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங் குளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் கலை அறிவியல் கல்லூரியின் 26ஆவது பட்ட மளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் சனிக்கிழமை (செப். 9) நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ஆர்.வாசு தேவராஜ் ஆண்டறிக்கை வாசித்தார். கல்லூரியின் தாளாளர் ஹரிணி ரவி பட்டம் பெற்ற வர்களை வாழ்த்தி பேசினார். விழாவில் தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் டாக்டர் வெ. இறையன்பு கலந்து கொண்டு 864 மாண வர்களுக்கு பட்டங்களை வழங்கினார். பிறகு, உரையாற்றிய அவர், “ இந்த நாள் வருங்காலத்தில் உங்கள் திறமையை வெளிப்படுத்துவதற்கான நாள், நீங்கள் கற்ற கல்விக்கு அங்கீகாரம் அளிக்கும் நாளாகும்” என்றார். சமுதாயத்தில் மக்களின் எதிர்பார்ப்பு என்பது அளவில்லாதது. அதை நிவர்த்தி செய்வதற்கு நீங்கள் பெற்ற கல்வி உதவியாக இருக்கும். உங்கள் அறிவு, திறமையை வெளிப்படுத்தும் நேரமிது, ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற சிவில் சர்வீஸ் தேர்வுக்கு உங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். உங்களின் உண்மையான வாழ்க்கை யில் பல்வேறு கேள்விகள் உங்களை ஆட்படுத்தும், அதை எதிர் கொண்டு, அதற்கு முடிவு காண நீங்கள் உங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். வாழ்க்கையின் குறிக்கோள் என்பது மிக முக்கியம் அந்த குறிக்கோளை நோக்கிச் சென்றால் நீங்கள் நல்ல நிர்வாகிகளாக, தொழில் வல்லுநர்களாக உயர முடியும் என்றும் அவர் கூறினார். இதில் கல்லூரி கல்வி இயக்குநர் முனை வர் எஸ்.ராமசந்திரன், எஸ்ஆர்எம் துணைப் பதிவாளர் அந்தோணி அசோக் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கல்லூரி துணை முதல்வர் கே.மதியழகன் நன்றி கூறினார்.