கள்ளக்குறிச்சி, ஜூலை 26-
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர் பேட்டை வட்டம், வடுகபாளையம் கிராமத்தில் வருவாய் பதிவை புதுப்பிக்கும் (யுடிஆர்) திருத்தம் செய்வதற்கு கடந்த ஆறு மாத காலமாக திருக்கோவிலூர் வரு வாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
கூத்தனூர், பல்லவாடி, கொம்ப சமுத்திரம் ஆகிய கிராமங்களில் 10 ஆண்டு களுக்கு மேலாக புறம்போக்கு நிலத்தில் குடியிருந்து வரும் மக்களுக்கு பட்டா கேட்டும் பல கட்ட போராட்டங்கள் நடத்தி யும் பட்டா கிடைக்கவில்லை.
வருவாய் பதிவை உடனடியாக புதுப்பிக்க கோரியும், பட்டா வழங்க வலி யுறுத்தியும் பாதிக்கப்பட்ட மக்கள் குடும்பத்துடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் இறையூர் கடை வீதியில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை வந்தடைந்தனர்.
அங்கு, ஒன்றியச் செயலாளர் வி.ரகு ராமன் தலைமையில் தொடர் முழுக்க போராட்டம் நடத்தினர். மாவட்டச் செய லாளர் டி.எம். ஜெய்சங்கர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.கே.பழனி, கே. ஜெயமூர்த்தி, டி.பச்சையப்பன், ஆர். செல்வராஜ், எஸ்.மலர், கே.அஞ்சலை, எம்.முகமது ரபிக் உள்ளிட்டோர் கோரிக்கை களை வலியுறுத்தி பேசினர்.