districts

img

எரிவாயு தகன மேடை அமைக்கும் பணி: மேயர் சுந்தரி ராஜா ஆய்வு

கடலூர்,ஜூலை 22- வசந்தராயன் பாளையம், வண்டி பாளையத்தில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்கும் பணியினை மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா ஆய்வு செய்தார். கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட வண்டி பாளையத்தில் நவீன எரிவாயு தகன மேடை  ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடைபெறுகிறது. வசந்தராயன் பாளையத்தில் தானியங்கி எரிவாயு தகன மேடை ரூ.2 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறுகிறது. இந்த இரண்டு எரிவாயு தகனமேடை அமைக்க பணியினை மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடனடியாக பணியை முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இதில் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன், மாநகராட்சி ஆணையர் காந்திராஜ், மண்டல குழு தலைவர் சங்கீதா செந்தில் முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.