பாஜக தேர்தல் பத்திரங்களின் பட்டியலை வெளியிடாத பாரத ஸ்டேட் வங்கியை கண்டித்து காங்கிரஸ் மற்றும் சிபிஎம் சார்பில் சிதம்பரம் தெற்கு வீதியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு நகர காங்கிரஸ் தலைவர் தில்லை ஆர். மக்கின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் ராஜா தலைமை தாங்கினர். இதில் காங்கிரஸ் மாநில செயலாளர் பி.பி.கே.சித்தார்த்தன், மாவட்டத் தலைவர் ராஜா சம்பத்குமார் ஜெமினி ராதா, கோ.குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஜி. ரமேஷ்பாபு, முன்னாள் மாநிலக்குழு உறுப்பினர் மூசா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் தேன்மொழி, மாவட்ட குழு உறுப்பினர் ஜெயசித்ரா, நகர் குழு உறுப்பினர்கள் சங்கமேஸ்வரன், அமுதா, மல்லிகா, ஜின்னா, செல்வம், ஆகாஷ் , நகர்மன்ற உறுப்பினர் தஸ்லிமா, ஓய்வூதிய சங்க நிர்வாகிகள் கலியமூர்த்தி, மகாலிங்கம், முகமதுஅலி ஆகியோர் கலந்து கொண்டனர்.