சிபிஎம் நெல்லை மாவட்ட குழு அலுவலகம் மீது தாக்குதல் நடத்திய வன்முறையாளாளர்களை கைது செய்ய கோரியும், சாதி மறுப்பு திருமணம் செய்த தம்பதிக்கு பாதுகாப்பு வழங்க கோரியும் சிபிஎம் சார்பில் எர்ணாவூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.பாக்கியம், பகுதிச் செயலாளர் எஸ்.கதிர்வேல், நிர்வாகிகள் கே.வெங்கடையா, ஆறுமுகம், குமார், ராமமூர்த்தி, ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.