districts

காலமானார்

சென்னை, மே 13 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரவாயல் பகுதி 149ஏ மீனாட்சி நகர் கிளை உறுப்பினரும், ஆட்டோ டாக்சி ஓட்டுநர் சங்கத்தின் மதுரவாயல் கிழக்கு பகுதி நிர்வாகி யுமான தோழர் என்.முனுசாமி வெள்ளி யன்று (மே 13) மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 55. அன்னாரது உடலுக்கு கட்சியின் மதுர வாயல் பகுதிச் செயலாளர் வி.தாமஸ், பகுதிக் குழு உறுப்பினர்கள் மா.வை.கிருஷ்ண மூர்த்தி, குமரகுருபரன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். அன்னாரது உடல் விருகம்பாக்கம் மயானத் தில் தகனம் செய்யப்பட்டது.